மயிலாடுதுறையில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று..!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நிபுணர்கள் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.  

அன்றாட தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்லும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தவறுகின்றனர். இதனால் தொற்று பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது 296 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதில் 20 ஆயிரத்து 493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 269 ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை அலட்சியமாக நினைத்து செயல்படாமல், வரும் நாட்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவற்றை தவறாது பின்பற்றுவதில் மக்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Corona Virus Update 2 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->