பச்சிளம் சிறுமியை அனுமதினமும் கற்பழித்து, வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய உறவினர்கள்.. மயிலாடுதுறையில் பரபரப்பு சோகம்.!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு கிராமத்தை சார்ந்த 14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்த இசிறுமியின் தாய் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், இவர்கள் பிளாட்பார வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

இவர்களுக்கு வீடுகள் இல்லாததால் அங்குள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் கடந்த 8 வருடமாக வசித்து வந்த நிலையில், சிறுமி அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சிறுமியின் மீது காமுக எண்ணம் கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை திருப்பியுள்ளனர். 

சிறுமியிடம் அவரது அக்கா கணவரே அத்துமீறிய நிலையில், இந்த விஷயம் வெளியே தெரியவரேவே, சிறுமி என்றும் பாராது கொடுமைப்படுத்தியுள்ளனர். அக்கா கணவரின் நண்பர், அவரின் நண்பர்கள் என கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளுக்கு அரங்கேறும் கொடூரமும் அறியாது இருந்த தாயின் பரிதாப நிலை உச்சமாக, சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயமும் வெளியே தெரியாமல் இருந்த நிலையில், சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் பிரசவத்திற்க்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், இந்த விவகாரம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதன்பின்னர் விசாரணையை துரிதப்படுத்தவே, சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் வெளி உலகத்திற்கு வந்துள்ளது. 

மேலும், சிறுமியை சீரழித்த அக்கா கணவர் தினேஷ், சிறுமிக்கு ஒரு சமயத்தில் தாலியும் கட்டியுள்ளான். சிறுமிக்கு தாலி கட்டி, அவரை மற்றவர்களுக்கும் விருந்தாக்கி, மனதளவிலும் தொடர் சித்ரவதை செய்துள்ளான். மேலும், சிறுமியுடன் சிறுமியின் உறவினர் அப்பு, ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai child sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->