தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு.. மேலும் புதிய கட்டுப்பாடுகள்.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பும் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினசரி கொரோனாபாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இதனால், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக தமிழக அரசு சார்பில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளுக்கு, கடைகளுக்கு நேர கட்டுப்பாடு, திரையரங்குகள் மூடுவது, கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முழு ஊரடங்கு அமல் படுத்தும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be full lockdown in chennai and kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->