தமிழகத்தில் அடுத்த முழு ஊரடங்கிற்கு தயாராகும் மாவட்டம்.? வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனவால் 3,616 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4,545 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 71,116 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 65 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 70,017 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. நேற்று மேலும் 1,203 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி 3 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 1233 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. 

சென்னையிலிருந்து ஊர் திரும்பியவர்கள் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி அதிகம் உள்ளனர். அந்த நகராட்சி மட்டும் தனிமைப் படுத்தப்படலாம் அல்லது 2 நகராட்சியில் முழு ஊரடங்கு அமல் படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be full lock down in viluppuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->