மதுரையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு.? நீங்கள் இந்த மாவட்டமா.? உஷார்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 1,487 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 42,752 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 34,112 பேர் குணமடைந்துள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் கடந்த 19 ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி காலை 12 மணிமுதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இந்நிலையில், மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், முழுஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலனை என தகவல் வெளியாகியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be full lock down 4 districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->