செல்போன் உளவுபார்த்த விவகாரம்.. திருமுருகன் காந்தி கொந்தளிப்பு..! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


என்னுடைய தொலைபேசியையும் உளவு பார்த்தது கண்டனத்துகுரியது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள பெரியார் படிப்பக அலுவலகத்தில் மே 17 அமைப்பின் தலைவர் திமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகளின் அலைபேசியை பாஜக தலைமையிலான அரசு பெகாசஸ் (Pegasus) என்ற செயலியின் வழியாக உளவு பார்த்துள்ள தகவல் அம்பலமாகியுள்ளது. 

இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமான செயலியின் வழியாக 50 க்கும் மேற்பட்டோரின் செல்போன் மற்றும் கம்பியூட்டர்களை பாஜக அரசு உளவு பார்த்துள்ளது. செல்போனில் இருந்து புகைப்படங்கள், விடியோக்கள், வாட்சப் உரையாடல், அலைபேசியில் பேசியது போன்றவற்றை திருடியுள்ளனர். 

இந்திய அளவில் ஒயர் என்ற ஊடகம் வழியாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஊடகத்தின் பத்திரிகையாளர்கள் செல்போன்கள் கூட உளவு பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக இதனைப்போன்று உளவுபார்த்து, பொய்யான தகவலை அரசு பதிவு செய்து 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. பெகாஸஸ் என்ற செயலி வழியாக மத்திய அரசு திட்டுத்தனமாக உளவுபார்க்கிறது.

இதன்மூலமாக, இன்று எனது அலைபேசியையும் மத்திய அரசு உளவுபார்த்துள்ளது. மக்களுக்காக போராடும் நபர்கள் மீது மத்திய அரசு உளவுபார்க்கும் வேலையை ஏன் செய்ய வேண்டும்?. இது தனிநபர், அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதனை அனுமதிசெய்தோம் என்றால் உளவு செயலி வழியாக பொய்யான தகவலை எங்களின் செல்போனில் பதிவு செய்து, எங்களை சிறையில் அடைக்க இயலும்.

40 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1500 க்கும் மேற்பட்ட நபர்களின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. என்னுடைய தொலைபேசியையும் உளவு பார்த்தது கண்டனத்துகுரியது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் " என்று தெரிவித்தார். முன்னதாக மத்திய அரசு இந்த விஷயம் தொடர்பான செய்திகள் வெளியானதும், பெகாஸஸ் செயலி விஷயம் குறித்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May 17 Party President Thirumurugan Gandhi Pressmeet at Coimbatore about Pegasus Spy Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->