நடக்காது என நினைத்தது நடக்க போகிறது! எதிர்பார்ப்பில் தமிழகம்!  - Seithipunal
Seithipunal


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பதை அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அளவானது விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. 

காவேரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு அணைகளும் ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைக்கு வரும் நீரினை காவேரி ஆற்றின் வாயிலாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர்திறப்பு அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

124.80 அடி அளவுக்கு நீரை தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அந்த அணையிலிருந்து தற்போது 50229 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல 84 அடி நீரை தேக்கும் உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 83.23 அடியாக உள்ளது. அந்த அணையில் இருந்து விநாடிக்கு 21667  கனஅடி வீதம் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இந்த இரண்டு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்திற்கு 71896 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  தமிழக- கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுக்கு விநாடிக்கு 58000 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நீர் வார்த்து அதிகரித்து இருப்பதன் மூலம் இன்று மேட்டூர் அணியின் நீர்மட்டம் 117.050 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி-டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 88.842 டிஎம்சியாக உள்ளது. 

முன்னர் மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருக்கும் போதே, மேட்டூர் அணை நிரம்பி, 120 அடி அளவை எட்டும் போது, நீர் இருப்பு 93.4 டி.எம்.சி.யாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணை நிரம்பும் முன்னே காவிரி-டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் மழையும் நின்றதால் கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு முற்றிலும் குறைந்து போனதால் அணை நிரம்பாது என்ற சூழல் உருவானது. 

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால், வரும் அதிகப்படியான நீரின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முழுமையாக கிடைக்கும் என்றால், தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் தமிழக அரசுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளுக்கும் கொண்டாட்டம் தானே! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mattur dam will be reached 120 feet level


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->