கணித மேதைதிரு.லியோனார்டு ஆய்லர் அவர்கள் நினைவு தினம்!
Mathematics genius Mr Leonhard Eulers memorial day
புகழ்பெற்ற கணித மேதைதிரு.லியோனார்டு ஆய்லர் அவர்கள் நினைவு தினம்!
bலியோனார்டு ஆய்லர் (Leonhard Euler, ஏப்ரல் 15, 1707 – செப்டம்பர் 18, 1783) என்பவர் சுவிஸ்சர்லாந்து நாட்டின் மிக புகழ் பெற்ற ஒரு கணிதவியல், மற்றும் அறிவியல் அறிஞர். இவர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அளவில் கணிதவியல் மற்றும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் செய்த பேரறிஞர். நுண்கணிதம் முதல் கோலக் கோட்பாடு வரையிலான கணிதத்துறையின் பல்வகைப்பட்ட பிரிவுகளில் ஈடுபாடு காட்டினார்.
இவருடைய கண்டுபிடிப்புகள் 70க்கும் மேலான எண்ணிக்கையில் பெரும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அதனிலும் அவருடைய கடைசி 17 ஆண்டுகள் முழுக்கண்ணும் தெரியாமல் அவர் வாயால் சொல்லி மற்றவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கணித வரலாற்றில் கணித இயலாளர்களின் பட்டியலில் ஆய்லருக்கு முதல் ஐந்தாறு இடங்களிலேயே ஓர் இடம் உண்டு.
இவர் தற்காலக் கணிதத்துறையில் பயன்படும் பெரும்பாலான கலைச்சொற்களையும் குறியீடுகளையும் அறிமுகப்படுத்தினார். விசையியல் (mechanics), ஒளியியல், வானியல் ஆகிய துறைகளிலும் பங்களிப்புக்களைச் செய்துள்ளார். "ஆய்லரை வாசியுங்கள், ஆய்லரை வாசியுங்கள் அவரே எங்கள் எல்லோருக்கும் குரு" என்று பியரே-சைமன் லாப்பிளாஸ் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
சமூக நீதி காவலர், ஒடுக்கப்பட்டோரின் குரல், வட்ட மேசை மாநாட்டு நாயகன், சமூக சீர்திருத்தவாதி 'திவான் பகதூர்' திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினைவு தினம்!.
திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்கறிஞர் ஆவார்.
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம் என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடினார்.
சமூக நீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க பாடுபட்டார்.தீண்டாமை ஒழிப்புக்காகத் தளர்வில்லாமல் அரும்பாடுபட்டவர்பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
English Summary
Mathematics genius Mr Leonhard Eulers memorial day