அதிமுகவின் #மாஸ்டர் ப்ளான்!! திருவாரூர் தேர்தலில் அமைதியாக இருப்பது அரசியல் சூழ்ச்சி?! - Seithipunal
Seithipunal


திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாஹுல் ஹமீது அறிவிக்கப்பட்டார். நேற்று அமமுக சார்பில் எஸ் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

திமுகவும் தனது வேட்பாளராக பூண்டி கலைவாணனை அறிவித்தது. ஆனால், நேற்று அறிவிக்கப்பட இருந்த அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற தகவல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு முக்கிய கட்சிகள் அனைத்தும், தனது வேட்ப்பாளரை அறிவித்த நிலையில் தமிழகத்தின் பெரும்பான்மை வாக்கு வங்கிகளை வைத்திருந்த அதிமுக, தனது வேட்பாளரை அறிவிக்கவே, இவ்வளவு தயங்குவது எதனால்? என்று தெரியவில்லை. 

மேலும், அமமுகவின் வேட்பாளர் அறிவிப்பை உள்வாங்கிய பின்னர் அறிவிக்க இருப்பதாகவும், இதற்கு பின்னால் சில அரசியல் வியூகங்கள் இருக்க கூடும் என்றும் கிசுகிசுக்கள் வந்துள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளரை அறிவிக்க இருப்பதில் மிகப்பெரிய டிவிஸ்ட் உள்ளதாகவும், அதில் மாஸ்டர் பிளான் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் முடிவை அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இந்த செய்தி அனைவரிடமும் ஓர் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

master plan of admk for thiruvarur by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->