ஸ்டாலின் வந்து சென்ற வேகத்தில் திருமண மண்டபத்திற்கு நேர்ந்த பரிதாப நிலை!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலின் போது நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ஆனது, வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். இதனால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் வேலூரில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தின் போது, சிறுபான்மையின வாக்குகளை பெறுவதற்கு ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்புகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்த வேகத்தில் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில், துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு அதனை செய்வோம், இதனை செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டு சென்றுவிட்டார்கள். இஸ்லாமியர்கள் மகிழ்ந்திருக்கலாம் ஆனால் மணடபத்திற்கு போதாதா காலம். 

இந்த நிலையில் தான் கூட்டம் முடிந்த வேகத்தில், முன்கூட்டியே எந்தவித அனுமதியும் இல்லாமல், இஸ்லாமிய தலைவர்களுடன் தனியார் மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்தியதால், தேர்தல் விதிமுறைகளை மீறியது உறுதியானது. இதனையடுத்து தனியார் மண்டபத்திற்கு அரசு அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்துள்ளார்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage hall sealed by officials DMK over the election rule


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->