வேலைவாய்ப்பு பெயரில் ‘மனித வேட்டை’! மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்கள்...!பெரிய மோசடி கும்பல் விவரம் வேண்டுமா...? - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளாக “தாய்லாந்தில் உயர்ந்த சம்பள வேலை” என கவர்ச்சியான வாக்குறுதிகள் அளித்து, குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்களை சுற்றுலா விசா மூலம் வெளிநாடு அழைத்துச் சென்ற ஒரு பெரிய மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது.

ஆனால் உண்மை அதைவிட கொடூரம்.அவர்கள் மியான்மர் நாட்டின் கே.கே.பார்க் எனப்படும் சட்டவிரோத முகாமில் சிறைபிடிக்கப்பட்டு, மிகக் குறைந்த சம்பளத்திற்கு கலவரப் படையில் புகுத்தப்பட்டதுதான் பின்னர் தெரிய வந்தது.

இந்த மனிதக் கடத்தல் மோசடியை தடுக்க,தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு “Blue Triangle” என்ற குறியீட்டுப் பெயரில் சிறப்பு ஆபரேஷனை ஆரம்பித்தது.இதன்கீழ், வேலைவாய்ப்பு மோசடியில் முக்கிய பங்கு வகித்த
ராஜ்குமார் (36)
மணவாளன் (35)
தீபக் (27)
அபிஷேக் ராஜன் (28)
ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மூவரும் மேற்கண்ட மாவட்டங்களில் செயல்பட்ட வேலைவாய்ப்பு மோசடி கும்பலின் பிராந்திய ஏஜென்ட்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அதே நேரத்தில், மியான்மர் நாட்டில் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டிருந்த 465 இந்தியர்களை இந்திய அரசு மற்றும் சர்வதேச உதவி குழுக்கள் இணைந்து நவம்பர் 6 மற்றும் 10 தேதிகளில் இரண்டு கட்டங்களாக மீட்டன.இதில் 35 பேர் தமிழ்நாட்டு இளைஞர்கள்.

அவர்களில் 18 பேர், தாய்லாந்தில் “உயர் சம்பள வேலை” கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்டவர்கள் என்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,“வெளிநாட்டு வேலைவாய்ப்பு” என யாராவது விளம்பரம் செய்தால், அதன் நம்பகத்தன்மை, பதிவு எண், உரிமம் பெற்ற ஏஜென்டா இல்லையா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manhunt name employment Tamils ​​captured Myanmar Want details big fraud gang


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->