டாஸ்மாக் கடைகள் மூடல், 5 நாள் 144 தடை உத்தரவு! பட்டவர்த்தி மதகடியில் போலீசார் குவிப்பு! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அடுத்த பட்டவர்த்தி மதகடி பகுதியில், நேற்று இரவு (5.12.22) 10 மணி முதல் (10.12.22) தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பட்டவர்த்தி மதகடி பகுதி பெருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் விசிக.,வினர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தியபோது இரு தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

அதே இடத்தில் இந்த ஆண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த விசிக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஆண்ட்ரியா தினம் மற்றொரு தரப்பினர் அலுவலகம் ஒன்றை திறக்க காவல் துறையில் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தனர். 

இதுகுறித்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், நேற்று இரவு 10 மணி முதல் 10.12.22 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அந்த உத்தரவுப்படி,  இரண்டு நபர்களுக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவதும், அரசியல் கட்சிகளின் கொடிகள் பேனர்கள் வைப்பதும் தடை.
வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை.
பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தனியார் வேன்கள் மூலம் பள்ளி செல்வதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை.
பட்டவர்த்தியை சுற்றி உள்ள இரு டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 9 டிஎஸ்பிகள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 550 போலீசார் பட்டவர்த்தி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manalmedu Pattavarthi 144


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->