கிருஷ்ணகிரி || தண்ணீரில் தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்றவர் பலி..! - Seithipunal
Seithipunal


தண்ணீரில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற நபர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள பேகப்பள்ளி பாகூர் செல்லும் தரைப்பாலத்தில் அதிக அளவு வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது.  இன்று அதிகாலை நல்லூர் பகுதியை சேற்ந்த மாரியப்பன் என்பவர் அந்த தரைப்பாலத்த கடக்க முயன்றார். அப்போது அவரது செல்போன் தண்ணீரில் விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்றார், அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெருகிறது ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராமங்களும், பல தொழிற்சாலைகளும், பள்ளிகளும் உள்ளதால் அவர்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் கோட்டாசியர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அங்கிருந்து  கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Drowns In To water Near Hosur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->