தமிழகத்தில் தொடரும் அவலம்.. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை கணிசமானவர்கள் விளையாடி வருகின்றனர். பொழுதுபோக்கை தாண்டி அதற்கு பலர் அடிமையாகி வருகின்றனர்.

பல தற்கொலைகளும் இதனால் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது டெய்லர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாளையக்காடு கோல்டன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் டெய்லராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சம்பவதன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தர்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சுரேஷ் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளாதாகவும் அதில் 5 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாகவும் தெரியவந்தது.

மேலும், அவர் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்றும் காவல்துறையிடம் சிகியது. அதில் அதில் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை ஆன்லைனில் சீட்டு விளையாடி இழந்து விட்டேன். கடன் தொல்லையால் இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதியிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை அரசு தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Committed Suicide Due to online Rummy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->