மலபார் மட்டன் ரோஸ்ட் சாப்பிட ஆசையா?! வாருங்கள் சுவைப்போம்!
Malabar Mutton Roast
மிகவும் சுவையான மலபார் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டால் தினமும் உங்க வீட்டில் மட்டன் ரோஸ்ட்தான்..!
மலபார் மட்டன் ரோஸ்ட் தென்னிந்திய உணவுகளில் மலபார் ரெசிபிக்கள் பிரபலமானவை. அதில் ஒன்று தான் மலபார் மட்டன் ரோஸ்ட். மலபார் மட்டன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மலபார் மட்டன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- மட்டன் - 500 கிராம்
- வெங்காயம் - 1 (அரைத்தது)
- தக்காளி - 1 (அரைத்தது)
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
மசாலா...
- வெங்காயம் - 1 (நறுக்கியது)
- வரமிளகாய் - 3
- கறிவேப்பிலை - சிறிது
- சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
-
பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
-
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளைப் போட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
-
பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய் சேர்த்து கிளற வேண்டும்.
-
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி, வெந்தயம், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வெண்டும.