அடுத்தடுத்து ராஜினாமா, காலியாகும் பாஜக கூடாரம்?! மொத்தமா காலி செய்ய., பக்கா பிளான் போட்ட அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முக்கிய பங்கு வகுக்கின்றன. இந்த கூட்டணி ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால், அண்மையில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட விவகாரத்தினை தொடர்ந்து கட்சே தேசியவாத காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார். இது பாஜகவுக்கு பெரும் அடியாக இருந்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், அம்மாநில சிறுபான்மையோருக்கான அமைச்சருமான நவாப் மாலிக் இது குறித்து பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், "எங்களுடைய கட்சியில் இணைவதற்கு சில பா.ஜ.க. தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அதுக்கான டிரெய்லர் வருகிற நாளில் வெளியிடப்படும். 

எண்களின் கூட்டணி ஆட்சி முழுமையாக தொடரும். நாங்கள் நினைத்தால் பாஜகவின் கூடாரம் காலியாகி விடும். நாங்கள் அப்படி செய்யமாட்டோம்" என்று அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra minister open talk about bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->