திருப்பூர் யோசனையை பின்பற்றிய மகாராஷ்டிரா.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அத்தியாவசிய தேவைகளை விடுத்து வெளியே வர தடை விதிக்கப்ட்டுள்ளது. மேலும், 5 நபர்களுக்கு மேலே ஒரு இடத்தில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அதிகளவில் வரும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், பணியாற்றும் இடங்களில் சானிடைசர் வைத்திருத்தல், அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வரும் இடங்களில் சானிடைசர் மூலமாக கைகளை கழுவ அறிவுறுத்தல் போன்று பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தையில் கிருமி நாசினி மக்கள் மீது படும் வகையில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஷவர் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சந்தைக்கு வரும் மக்கள் கிருமி நாசினி தெளிக்கும் இடத்தை கடந்து உள்ளே செல்லும் வகையில் அனுமதி செய்யப்பட்டது. 

இதனைப்போன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் புனே மாநகராட்சி சார்பாக கிருமி நாசினியை கடந்து மக்கள் அங்குள்ள நாயுடு மருத்துவமனைக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra hospital sanitation process


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->