மோடி-ஜின்பிங் பார்த்து, ரசித்த கட்டிடம் இடிந்தது.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் இடையே முறைசாரா உச்சி மாநாடு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பல்லவர் காலத்தில் கட்டபெற்ற கலை நுட்பம் வாய்ந்த இடமானது உலகமெங்கும் பிரபலம் ஆகியது. எனவே, இந்த இடத்திற்கு தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். 

வரலாற்று சந்திப்பு நிகழ்விற்கு பின்னர், செல்ஃபி எடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்தோரும், பெருமையுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிலையில், மோடியும் மற்றும் சீன அதிபர் இணைந்து பார்வையிட்டு வியந்து ரசித்த ஒரு மண்டபத்தின் ஒரு பகுதி நேற்று பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. 

இந்த இடிந்த பகுதி தான் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்த போது கட்டுப்பாட்டு அறையாகச் செயல்பட்டதாக சில தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றது. இருப்பினும் பெரிய அளவிற்கு எதுவும் சேதமில்லை. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahabalipuram damaged


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->