பஞ்சமி நிலத்தை மீட்க கூறி மதுரையில் விசிகவினர் போராட்டம்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.! - Seithipunal
Seithipunal


மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்த நிலையில், ஆதி திராவிடர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு மீண்டும் ஆதி திராவிடரிடம் ஒப்படைக்க வேண்டும் உட்பட 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் விசிகவினர் திரண்டு செல்ல முயற்சி செய்ததால் காவல் துறையினர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லாத வகையில் கதவுகளை அடைத்து வெளியே தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு காவல் துறை அதிகாரிகளுக்கும் - விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கையை முன்வைத்து குரல்களை எழுப்பியதால், காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க அனுமதி அளித்தனர். 

இதனையடுத்து, அங்கு திரண்டு வந்திருந்த விசிகவினரில் 5 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார். மனுக்களை வழங்கியவர்கள் மீண்டும் திரும்பி வந்ததை தொடர்ந்து, போராட்டம் நிறைவு பெற்று விசிகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai VCK Protest at District Collector Office 12 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->