ஆசையால் ஒரு கொலை, இறுதியில் தற்கொலை.. அனாதையான மகள்..! வீட்டிற்குள்ளே புதைத்து பூசப்பட்ட பிணம்.!! - Seithipunal
Seithipunal


திருமங்கலத்தில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஆறுமுகம் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று, தனது பத்து வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

பசும்பொன் நகரை சார்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சித்ரா தேவி என்ற யோகா ஆசிரியரிடம், ஹரி கிருஷ்ணனின் மகள் யோகா கற்று வந்துள்ளார். இந்நிலையில், தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக ஹரிகிருஷ்ணன் சென்று வந்த சமயத்தில், சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மாயமாகியுள்ளார். தனது மகள் சித்ராதேவி மாயமானதை தொடர்ந்து, தேவியின் தந்தை கண்ணையா திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 5 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தேர்தல் காரணமாக வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். 

இந்நிலையில், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கும் - தனது மகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி, அவர்கள் இருவரும் பேசிய ஆடியோவை கண்ணையா காவல் துறையினரிடம் வழங்கியுள்ளார். மேலும், ஹரி கிருஷ்ணனால் தனது மகள் சித்ரா தேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் வினோதினி, மதுரை காவல் கண்காணிப்பாளர், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இது தொடர்பான புகாரை அனுப்பி வைத்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் திடீரென தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஹரி கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்த மரண கடிதத்தை கைப்பற்றினர். 

இந்த கடிதத்தில், " சித்ராதேவியை நான் கொலை செய்து பாத்ரூமில் புதைத்து வைத்திருக்கிறேன். இதை நானே செய்தேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தனக்கு தானே நான் தண்டனை கொடுத்துக் கொண்டேன். சித்ராவின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்டில் உள்ளது " என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், விசாரணையில் யோகா ஆசிரியை சித்ரா தேவியை வீட்டுக்கு அழைத்து வந்த சமயத்தில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டை அரங்கேறி கொலை நடந்தது உண்மையாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Thirumangalam Yoga Teacher Chitra Devi Murder by Lawyer Hari Kirshnan Due to Affair 5 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->