மதுரை பீச், செயற்கை பனிமலை உட்பட 35 வாக்குறுதிகள்.. சுயேச்சை வேட்பாளர் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்திருந்தார். இது குறித்த வாக்குறுதிகளில் தான் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக வந்தால், " மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர், 100 நாட்கள் சுற்றுலா பயணமாக நிலவுக்கு அழைத்து செல்லப்படுவர். 

இதற்காகவே தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். மதுரை தெற்கு தொகுதி மக்கள் அனைவருக்கும், 'ஐ-போன்' வழங்கப்படும். உலகம் வெப்பமயம் ஆவதால், 300 அடி உயர செயற்கை பனி மலை உருவாக்கப்படும்.

விடுமுறை நாட்களில் மக்கள் பொழுது போக்க செயற்கை கடல் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு, வீட்டு வேலை செய்ய, 'ரோபோ' வழங்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம். போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு, ஒரு படகு வழங்கப்படும் " என்று 35 வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சரவணன் எத்தனை வாக்குகள் பெற்றுள்ளார் என்று பலரும் ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள். அவர் மாலை 03.50 மணி நிலவரப்படி 11 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai South Constituency Independence Candidate Saravanan Getting 11 Votes TN Election 2021 Result


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->