முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திய 29 வயது சாப்ட்வேர் எஞ்சினியர் மரணம்.. மதுரையில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 29 வயது நபர், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார். 

மதுரை மாவட்டத்தில் உள்ள புதுவிலங்குடி பகுதியை சார்ந்தவர் டி ஆண்ட்ரூ சைமன். இவர் தகவல் தொழிநுட்ப மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 29 வயதாகும் சைமன் தனக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். இதனையடுத்து, அரசின் இணையத்தில் தனது விபரங்களை வழங்கி முன்பதிவு செய்து காத்திருந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சைமன் அங்குள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் தனக்கான முதல் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் இருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பின்னர் வீட்டிற்கு வந்த சைமனுக்கு காய்ச்சல் ஏற்படவே, மூச்சுத்திணறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தடுப்பூசியை செலுத்திய 21 மணிநேரத்திற்கு பின்னர் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட சைமன், சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் வீட்டிலேயே சரிந்து விழுந்துள்ளார். 

இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

அவரின் மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல் கிடைக்காத நிலையில், பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்ததும் சைமனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர் கே.வி அர்ஜுன் குமார் தெரிவித்தார். மேலும், சைமன் நீரிழிவு நோயால் கடந்த 6 மாதமாக பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அவர் நீரிழவு நோய்க்கான மருந்துகள் ஏதும் எடுக்கவில்லை என்றும் தெரியவருகிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Software Engineer After Death Taking First dose of Covishield Vaccine


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->