அவலம்: 5 பைசா பிரியாணிக்காக நெரிசலில் சண்டை.. பச்சிளம் குழந்தையுடன் தாய்மார்கள்..! - Seithipunal
Seithipunal


புதிதாக திறக்கப்பட்ட கடையில் 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்பட்டதால், தனிமனித இடைவெளியின்றி மக்கள் திரண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு அருகே புதிய பிரியாணி கடை திறக்கப்பட்டது. இந்த கடையின் உரிமையாளர் கடந்த 2 தினமாக 5 பைசா கொடுப்பவர்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்து விளம்பரம் செய்திருந்தார். 

இந்த விளம்பரத்தை பார்த்த மக்கள் பலரும் பிரியாணி வாங்க திட்டமிட்டு பழைய 5 பைசா நாணயங்களை எடுத்து வைத்திருந்த நிலையில், இன்று காலை கடை திறக்கப்பட்டது. கடையில் பிரியாணி வாங்க மக்களின் கூட்டம் திரளாக குவிந்தது. 

முதலில் மக்கள் 10 பேர் இருக்கையில் வரிசையில் நிற்க தொடங்கினாலும், கூட்டம் அதிகரித்த சமயத்தில் மக்கள் பிரியாணிக்கு முண்டியடித்ததால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள், கடையில் கூட்டம் குவிந்துள்ளதை பார்த்து மக்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். 

ஆனால், மக்கள் அனைவரும் பிரியாணியின் மோகத்தில் இருந்ததால் காவல் துறையினரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனையடுத்து, கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகள், மக்களை அங்கிருந்து கலைந்து செல்லக்கூறி வற்புறுத்தினர். 

பிரியாணி கடைக்கு கொரோனா காலத்தில் 5 பைசா, 10 பைசா மலிவு விளம்பரங்கள் தொடர்பான சர்ச்சை இன்று வரை தீர்ந்தபாடில்லை. இவர்களின் எதிர்கால வருமானத்திற்காக மக்களின் எதிர்காலத்தை சீரழிகிறார்கள் என்பதே அதனைக்காணும் சமூக ஆர்வலர்களின் மனக்குமுறலாக இருக்கிறது. 

இதில், ஒரு பச்சிளம் குழந்தையுடன் தாய் தனது மகனை இடுப்பில் வைத்து பிரியாணிக்கு சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது. வாழ்நாளில் கிடைக்காத பண்டமா? பிரியாணி.. வீட்டில் செய்து சாப்பிடலாம், குறைந்த விலைக்கு முண்டியடித்து யாரும் உயிரை விடாமல் இருந்தால் சரி..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Sellur Area Biryani sales Woman with Baby Fight for it So Sad Sociality


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->