கட்டிங், ஷேவிங்கில் இருந்து அனைத்துக்கும் 50% சலுகை... ஆனா ஒரு கண்டிஷன்.. மதுரை சலூனில் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள எல்லோரா பேமிலி முடிதிருத்தும் அழகு நிலையம், தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கடைக்கு முடிதிருத்தும், அழகை மெருகூட்ட வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருந்தால், அவர்கள் சான்றிதழை காண்பித்து 50 விழுக்காடு விலையை குறைத்து கொள்ளலாம். 

தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, தனது கடைக்கும் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அவர்கள் முடி திருத்தும், பிற அழகுபடுத்துதல் என அனைத்தையும் 50 விழுக்காடு தள்ளுபடியுடன் செய்துகொள்ளலாம். 

எல்லோரா பேமிலி சலூனின் உரிமையாளர் கார்த்திகேயன் இது தொடர்பாக தெரிவிக்கையில், " தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டும், மூன்றாவது கொரோனா அலை பரவலை தடுக்கும் பொருட்டும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Saloon Announce 50 Discount to Corona Vaccinated Person during Haircut and Others


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->