மதுரையில் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர்!! சொன்ன முதல் வார்த்தையே இதுதானாம்!!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட ஆட்சியர்  எஸ். நாகராஜன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வட்டாட்சியர் மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற கோரி தேர்தல் ஆணையதுக்கு உத்தரவு போட்டது.

தேர்தல் ஆணையம் இதனை ஏற்று புதிய மாவட்ட ஆட்சியராக எஸ். நாகராஜனை நியமித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் மதுரை மாவட்ட ஆட்சியராகவும்  நியமிக்கப்பட்ட எஸ்.நாகராஜன் இன்று பதவியில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர் இதற்குமுன்பாக இவர் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்," திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 9 பறக்கும் படைகள் உள்ள நிலையில், தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும். என எச்சரித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai new collector says about election commission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->