மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 9 மாத கர்ப்பம்.. விசாரணையில் பேரதிர்ச்சியாக காப்பக நிர்வாகி.. கிழவனின் கொடூர செயல்.! - Seithipunal
Seithipunal


கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற பெயரில் மனவளர்ச்சி காப்பகம் நடத்தி வந்த இடத்தில், மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பிணியாக்கியபட்டதும் கொடூரமும், அதனை மறைக்க முயன்ற அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி பகுதியில் கென்னட் சபைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர் உள்ளிட்ட 10 பேர் நடத்தி வந்த நிலையில், இந்த காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக தாய்மாமா மற்றும் பெண்ணின் சகோதரரால் சேர்க்கப்பட்டுள்ளார். 

தாய், தந்தையும் இல்லாமல் கவனிக்க ஆள் இன்றி இருந்த மனவளர்ச்சி குன்றிய தனது தங்கையை சகோதரர் காப்பகத்தில் சேர்த்த நிலையில், பொருளாதாரத்திற்காக உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும், மாதம்தோறும் ரூபாய் 1500 கட்டணத்தை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் தாய் மாமா உறுதுணையாக இருந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. 

பொங்கல் பண்டிகை மற்றும் பெண்ணின் பெற்றோரின் நினைவு நாளுக்கு மட்டும் அந்தப் பெண்மணி வீட்டுக்குச் செல்வார். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பெண்ணின் சகோதரர் மற்றும் தாய் மாமாவுக்கு தொடர்பு கொண்ட காப்பக நிர்வாகி ராஜசேகரன், பெண்ணுக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சாப்பிட்டால் வயிறு ஊதி கொள்கிறது என்றும் தெரிவித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் தாய்மாமா முறையாக காப்பகத்தில் எழுதிக்கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், வீட்டில் இருந்த பெண்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் மனவளர்ச்சி குன்றிய பெண்மணி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதியாகவே, செய்வதறியாது திகைத்துப் போன பெண்ணின் சகோதரர், இதுதொடர்பாக மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், கர்ப்பத்திற்கு காரணமாக தனது தாய்மாமாவின் பெயரை கூறியுள்ளார். காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகையில், வெதும்பிப்போன பெண்ணின் தாய்மாமா, நான் பெண்ணை தான் மகள் போல வளர்த்த வந்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இவரது பேச்சுக்களில் இருந்த உண்மையை புரிந்துகொண்ட காவல் துறையினர், காப்பக நிர்வாகிகள் பக்கம் விசாரணையை திருப்பியுள்ளனர். 

காப்பகத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் நிர்வாக குழுவை சேர்ந்த 10 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு பணியாற்றியவர்களின் விபரத்தை சரி பார்க்கையில், கடந்த பல வருடங்களாக பணியாற்றி வந்த 67 வயது ஊழியர் ஜீவ நேசன் சமீபத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது மற்றும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டதும் உறுதியானது. அவரை அழைத்து விசாரணை செய்கையில் உண்மை தெரியவந்துள்ளது. 

காப்பகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த ஜீவ நேசன் பெண்ணை கவனித்துக் கொள்வதாக கூறி, காப்பகத்தின் தோட்ட பகுதிக்கு அழைத்துச் சென்று ஏழு முறை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பெண்மணி கர்ப்பமான நிலையில், இந்த தகவலை அறிந்த காப்பக நிர்வாகி ராஜசேகர் உள்ளிட்ட 10 நிர்வாக குழுவினர், காப்பகத்தின் பெயர் கெட்டுவிடும் என்பதால் உடனே அங்கிருந்து ஜீவ நேசனை அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், கர்ப்பிணிப் பெண்ணை அழைத்து வயிற்றைத் தடவி காண்பித்து, இது எப்படி வந்தது? என்று யார் கேட்டாலும் தாய் மாமாவின் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை பெண்மணி முதலில் கேட்காததால் ஒரு வாரமாக 4 ஊழியர்களை வைத்து அடித்து துன்புறுத்தி பயிற்சி அளித்து இருக்கின்றனர். இதனையடுத்து, 67 வயதான காமுகன் ஜீவ நேசன் கைது செய்யப்பட்ட நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் பாலியல் பலாத்கார விஷயத்தை மறைத்து இருந்த கிறிஸ்தவ சேவா சங்க காப்பக நிர்வாகிகள் பத்து பேர் மற்றும் 4 ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Muthupatti Woman Sexual Abused by Aged Culprit She Mentally Challenged Stay at Christian Hostage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->