தொடங்கியது முன்பதிவு! அலைமோதும் வீரர்கள் கூட்டம்! வெளியான அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.

காளைகளுக்கு, மண் குவியலில் குத்துதல், ஓட்டம், நீச்சல் பயிற்சி, மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்து விடுதல் போன்ற பயிற்சிகளையும் உரிமையாளர்கள் கொடுத்து வருகின்றனர். மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன் படி மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது என்னும் அறிவிப்பு  அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில், வரும் 17ம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

English Summary

Madurai Jallikattu Pre Booking


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal