முடங்கிக்கிடக்கும் தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச்சாலை பணிகள்.. மதுரை கிளை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தென்காசியை சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனுவில், " திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள 45 கிமீ தூர சாலையினை, நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் தொடங்கிய பணி, செப்டம்பர் மாதம் 2020 ஆம் வருடம் நிறைவடைய வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது வரை பணிகள் நிறைந்த பாடில்லை. ஏற்கனவே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 1400 மரங்கள் அகற்றப்பட்டது. 

திருநெல்வேலி - தென்காசி சாலையில் இருக்கும் அபாயகரமான வளைவுகள் மற்றும் இரயில்வே தண்டவாளங்கள் போன்றவை குறுக்கிட்டு இருப்பதால், இப்போதுள்ள சாலையில் செல்ல மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சாலை விரிவாக்க பணிகளால் சாலைகள் சேதமடைந்து உள்ளது.

விரைந்து தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும் " என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனு தொடர்பான பதில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court Order Submit Answer to Highway department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->