இந்த காரணத்தை சொல்லி கடன் தர மறுக்கக்கூடாது.! வங்கிக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி , மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பிளஸ் 2 முடித்து 2017 ஆம் ஆண்டு கோவையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விமான பராமரிப்பு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.

இந்தநிலையில் படிப்பை தொடர என்னிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால், மதுரை ஒத்தக்கடை பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கி கிளையில் மத்திய அரசின் வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டத்தின் கீழ் கல்வி கடன் கேட்டு  விண்ணப்பித்திருந்தேன்,  சிபில் ஸ்கோர் எனப்படும் கடனை திரும்ப செலுத்துவதற்கான தகுதி இல்லை என தனது வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மறுத்து விட்டதாக குறிப்பிட்டுள்ள மாணவி.

முதலாம் ஆண்டுக்கான கல்லூரி கட்டணத்தை தன்னால் செலுத்த முடியவில்லை என்பதால் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில்  இருந்து தன்னை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மனுதாரரின் மகளுக்கு கல்வி கடன் வழங்க மறுத்து எஸ்பிஐ வங்கி கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மாணவிக்கு நான்கு வாரத்தில்கல்வி கடன் வழங்கவும், முதலாம் ஆண்டு கால்லூரியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரியை உடனடியாக அதே கல்லூரியில் சேர்க்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court jundgement for education loan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->