திரையரங்கு விவகாரத்தில், தமிழக அரசுக்கு மதுரை கிளை பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளில் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கியது. இந்த விஷயத்திற்கு மருத்துவர்கள், நீதிமன்றம், மத்திய அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு திரையரங்குகளில் உள்ள இருக்கையில் 100 விழுக்காடு இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்கும் உத்தரவு திரும்ப பெறப்படுவதாகவும், முன்னதாக அனுமதி வழங்கப்பட்ட 50 விழுக்காடு இருக்கையில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. 

இந்த விஷயம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், முன்னதாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது, " திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவை பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். திரையரங்கில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் அனைவரும் அணிந்திருப்பதை உறுதி செய்யவும் வேண்டும். 

திரையரங்கு கட்டணம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பொங்கல் தினத்தன்று தேவையில்லாமல் மக்கள் திரையரங்கில் கூட கூடாது. திரைப்பட காட்சிகள் பதிவு செய்துள்ள நேரத்திற்கு மட்டுமே அங்கு செல்ல வேண்டும் " என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court Congrats TN Govt about Cinema Theater Seat Capacity


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->