தூத்துக்குடி துப்பாக்கிசூடு போன்ற மற்றொரு நிகழ்வு நடக்க கூடாது - மதுரை கிளை நீதிபதிகள்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் என பொதுநல மனுதாக்கல் உயர்நீதிமன்ற கிளையில் செய்யப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நீதிபதிகள் தெரிவிக்கையில், " தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற மற்றொரு சம்பவங்கள் நடைபெறக்கூடாது. 

எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் போராடும் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த கூடாது. ஒரு நாகரீகமான சமுதாயத்தில், இது போன்ற செயல்கள் ஏற்புடையதா?. தேசிய மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக அரசின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம் " என்று தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court Bench Statement about Thoothukudi Sterlite Protest Gun Fire 25 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->