பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை - மதுரை கிளை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கிளை எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதற்கட்டமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் பாடங்கள் பயிற்றுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு பள்ளிகளில் கொரோனா பரவல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என ஏற்பட தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களின் நேரடி வகுப்பை தடை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரவே, வழக்கு தொடர்பான விசாரணையை நடத்திய நீதிபதிகள், " பள்ளிகளுக்கு மாணவர்களை கட்டாயம் வர வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கு தொடர்பாக தமிழக முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் " என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Warning about School Students Could Not Forced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->