வருமான வரித்துறைக்கு தெரிந்தே, தேர்தலில் பணம் கொடுக்க பணப்பரிவர்த்தனை - மதுரை நீதிபதிகள் வேதனை.! - Seithipunal
Seithipunal


மதுரையை சார்ந்த வழக்கறிஞர் இரத்தினம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்த மனுவில், " விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உயிரிழந்தார். 

இதன்பின்னர் கும்பகோணத்தில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், உண்மையை மறைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த விஷயம் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, " வாக்காளர்களே வாக்குகளுக்கு பேரம் பேசி பணம் வாங்கி வருகின்றனர். தேர்தல் வேட்பாளர்களும் மக்களுக்கு பணத்தை பதுக்கி வைத்து விநியோகம் செய்து வருகின்றனர். வருமான வரித்துறைக்கு தெரிந்தே பல பணபரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது " என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Says about Money Transfer illegally Known by Income Tax


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->