கொள்கைமுடிவெடுத்த பின்னர் நீதிமன்ற உத்தரவு தேவையில்லை.. மதுரை நீதிபதிகள் கருத்து.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் ஆனது, பல தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு கண்டனங்களை பெற்று வருகிறது. தந்தை, மகனின் மரணத்திற்கு பல தரப்பில் இருந்து நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து வலுத்து வந்த நிலையில், தமிழக முதல்வரின் பதிலுக்காக அனைவரும் காத்திருந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியுள்ளது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும், அரசு கொள்கை முடிவுகளை எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் அனுமதி கோர தேவையில்லை என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai court says about CBI Investigation sathankulam murder case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->