டாஸ்மாக் மாதிரி, மணல் விற்பனையை தமிழக அரசு நடத்துமா?.. மதுரை நீதிமன்றம் கேள்வி..! - Seithipunal
Seithipunal


மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு மணற்கடத்தல் நடைபெற்று வந்தது. மேலும், மணற்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் அதிகளவு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டும் விண்ணப்பித்தனர். இந்த விஷயம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை நடைபெற்றது. 

இந்த விசாரணையில், முன்னதாகவே மதுரை நீதிமன்ற நீதிபதிகள், மணற்கடத்தல் வழக்கில் உடனடியாக ஜாமின் கிடைப்பதால், இந்த குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றும், மணற்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், மணற்கடத்தலை தடுக்க டாஸ்மாக் போல மணல் விற்பனையை தமிழக அரசு நடத்த இயலுமா? என்று மதுரை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மணற்கடத்தலில் ஈடுபட்ட எத்தனை வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது? என்பது குறித்த பதில் மனுதாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai court raise question about sand smuggling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->