மருத்துவ கலந்தாய்வில் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள்.. மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதில், மருத்துவ கலந்தாய்வு துவங்கிய ஒருநாளைக்கு கழித்து, மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதனால் முதல் நாளில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தும், கட்டணம் செலுத்த வசதியில்லாமல் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பான மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, " கட்டணத்தை அரசே ஏற்பதால் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தகுதியான மருத்துவர்கள் உருவாகுவார்கள். மருத்துவ சீட்டுக்கு அதிக பணம் செலவிடுபவர்கள், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

நான்கு மாணவர்களுக்கு தலா ஒரு எம்.பி.பி.எஸ் அல்லது பி.டி.எஸ் சீட்டை ஒதுக்கி வைக்க வேண்டும். வாய்ப்பை தவறவிட்ட நான்கு மாணவர்களுக்கு சீட்டு ஒதுக்கியாக வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட சீட்களில் இருப்பு எம்.பி.பி.எஸ் அல்லது பி.டி.எஸ் படிப்புகளில் மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்க வேண்டும் " என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Order to TN Govt about Medical Seat Counseling 24 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->