தமிழக அரசு பணியாளர்கள், தமிழ் மொழியில் எழுதவும், பேசவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் - மாஸ் காண்பித்த மதுரை நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார். இவர் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக கடந்த 2018 ஆம் வருடத்தில் பணியில் சேர்ந்துள்ளார். 

இவர் பள்ளிப்படிப்பினை தமிழ் வழியில் முடிக்காத நிலையில், பணி விதிகளின் படி இரண்டு வருடத்திற்குள் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். இரண்டு வருடத்திற்கு பின்னர் நடந்த தேர்வில் கலந்துகொண்ட அவர், தோல்வியை தழுவியுள்ளார். 

இதற்கு விளக்கம் அளிக்க நோட்டிஸ் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த உத்தரவினை எதிர்த்து ஜெயக்குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், " தமிழகத்தில் அரசின் அலுவல் மொழியாக தமிழ் இருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் தமிழ் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனால் பணியாளர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மனுதாரர் பணியில் இருக்கையில் 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளாமல் தோல்வியை தழுவியுள்ளார். இவரது தோல்வி தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஆர்வம் இல்லாததை எடுத்து காட்டுகிறது. பணியாளர் தமிழ் மொழியில் பேசுவது மட்டுமல்லாது, எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

தமிழ் மொழி தேர்ச்சியில் தேர்வு என்ற விஷயத்தில் எவ்விதமான சமரசமும் கிடையாது. இதனால் உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்புகள் வேண்டும் என்றால் வழங்கலாம். அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் பிரச்சனை இல்லை. அந்த தேர்வில் தோல்வியை தழுவினால், பணிநீக்க நடவடிக்கை செல்லும் " என்று கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI COURT JUDGEMENT ABOUT TAMIL LANGUAGE SPEAKING AND WRITING NECESSARY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->