தனியார் ஊழியர்களை பாருங்கள்.. அரசு ஊழியர்கள் மீது நீதிபதிகள் பாய்ச்சல்.!! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த வாசு என்பவர் காவல் உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்தை எதிர்ப்பு தெரிவித்து வாசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

மேலும், பணியிடமாற்றத்தில் தனக்கு பிரச்சனை இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகளின் அமர்வு முன்னிலையில் வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

இதில் நீதிபதி சுரேஷ்குமார் தரப்பில், " கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக இருந்து கடுமையாக உழைக்க வேண்டும். கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. 

தனியார் நிறுவன பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் கொரோனாவால் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். சூழலை உணர்ந்து அரசு பணியாளர்கள் செயல்பட வேண்டும். பணியிட மாற்றத்தை இரத்து செய்ய இயலாது என்றும் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Consulting Govt Employees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->