#JustIN: இலஞ்ச ஒழிப்புத்துறையை கடுமையாக சாடிய மதுரை கிளை.! பரபரப்பு கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


இலஞ்ச புகாரில் கைதாகி சிறையில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு ஜாமின் வழங்க மதுரை கிளை மறுத்துவிட்டது. மேலும், இலஞ்ச ஒழிப்புத்துறை நீதிபதிகளால் கடுமையாக சாட்டப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, இலஞ்சம் வாங்கிய புகாரில் இலஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்து வரும் கலைச்செல்வி, ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், " அரசு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும் போது கூச்சப்படுவதில்லை. இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை என்பது பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. முறையான விசாரணைகள் மற்றும் சோதனைகள் செய்யப்படுவது இல்லை. 

இலஞ்ச ஒழிப்புத் துறை என்பது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வருடத்திற்கு 100 வழக்குகள் மட்டுமே அவர்கள் பதிவு செய்கிறார்கள் " என்று இலஞ்ச ஒழிப்புத்துறையை கடுமையாக சாடி பேசிய நீதிபதிகள், மனுதாரரான இலஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட கலைச்செல்விக்கு ஜாமின் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Condemn Tamilnadu Bribery Control Department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->