படிக்க விரும்பியது தவறா?.. மதுரை மாணவி ஆன்லைன் கடன் மோசடியால் பணத்தை இழந்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கல்விக்கடன் வழங்குவதாகக் கூறிய ஆன்லைன் மோசடி கும்பலை நம்பிய மாணவி, பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் தேவி நகர் பகுதியைச் சார்ந்தவர் தாரணி. இந்த மாணவியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி சட்டம் பயில ஆசைப்பட்ட நிலையில், அதற்கு சீட் கிடைக்காததால் 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள டிசைன் மீடியா கல்லூரியில் பி.எஸ்.சி படிக்க விண்ணப்பித்துள்ளார். 

இதற்கு கல்விக்கட்டணம் ரூபாய் 2 இலட்சம் வரை செலவாகும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கவே, தாயின் சொற்ப வருமானத்தில் படித்து வந்த தாரணி, கல்விக் கடன் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆன்லைன் மூலமாக மீனாட்சி பைனான்ஸ் என்ற பெயரில் கல்விக் கடன், தனிநபர் கடன், விவசாய கடன் உள்ளிட்டவை பெற்று தரப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்த மாணவி, அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார். 

அதில் பேசியவர்கள் ரூபாய் 3 லட்சத்து 32 ஆயிரம் கடனுக்கு பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி, முதற்கட்டமாக ரூபாய் 50,000 மற்றும் அடுத்தகட்டமாக தாயின் தாலிசங்கிலியை அடகு வைத்து ரூபாய் 26 ஆயிரத்து 600 என்று அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் தாரணி செலுத்தியுள்ளார். 

இதன் பின்னர் கடன் கொடுப்பதாக தெரிவித்த நிறுவனம் அலைபேசியை அணைத்து வைத்துள்ளது. பலமுறை முயற்சித்தும் பலனில்லை. இதுகுறித்து தோழிகளுடன் வருத்தம் தெரிவித்த நிலையில், தாரணியில் தாயார் வெளியே சென்றிருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தாரணியில் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அறிமுகம் இல்லாத நிறுவனத்துடன் எக்காரணம் கொண்டும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எப்படியாவது படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்பியது அந்த பெண்ணின் தவறா?.. இதுபோன்ற கேடுகட்ட கீழ்த்தரமான மோசடி கும்பலால் ஒரு மாணவியை மனதுடைந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai College Student girl Dharani Suicide due to Fraud Loan Agency Money Cheating 11 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->