சிறுமி மித்ரா பூரண நலம்பெறவேண்டி, மதுரை மாணவி கிருத்திகா ஓவியம் வரைந்து நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


சிறுமி மித்ரா பூரண நலன்பெற்று இல்லத்திற்கு திரும்ப வேண்டும் என மதுரை கல்லூரி மாணவி மித்ரா ஓவியம் வரைந்து இருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் காந்திநகர் பகுதியை சார்ந்தவர் சதீஷ் குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்கள் இருவருக்கும் மித்ரா என்ற 2 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி கடந்த 1 மாதமாக அரியவகை மரபணு நோய் என்று அழைக்கப்படும் முதுகு தண்டுவட நார்சிதைவு நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனால் சிறுமி உடலால் துயரத்தை அனுபவித்து, நடக்க கூட முடியாத சூழ்நிலைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் உரிய மருத்துவம் வழங்காத பட்சத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என தெரிவித்துள்ளனர். 

சிறுமி மித்ராவுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் மருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால், அதன் இறக்குமதி வெறியுடன் ரூ.22 கோடி தேவைப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தி பொதுமக்களிடம் நிவாரண நிதி உதவி சேகரிக்க தொடங்கினர். சிறுமியின் சிகிச்சைக்காக ரூ.16 கோடி பணம் மருந்தின் விலையளவு கிடைத்துவிட்ட நிலையில், மருந்தை இறக்குமதி செய்ய தேவையான ரூ.6 கோடி பணம் மேலும் தேவைப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துக்கான இறக்குமதி வரியை இரத்து செய்யக்கூறி பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் கோரிக்கை வந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், தமிழகத்தை சார்ந்த பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினர். இன்று காலை மருந்துக்கான இறக்குமதி ஜி.எஸ்.டி வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்தார். இதனால் எவ்விதமான கூடுதல் வரிகள் இல்லாமல் மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம். 

இந்நிலையில், மதுரையில் உள்ள மேல அனுப்பானடி பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா, சிறுமி மித்ரா பூரண நலம்பெற வேண்டி #SaveMithra என்ற ஹாஷ்டேக்குடன் சிறுமியின் புகைப்படத்தை வரைந்து பதிவு செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்தின் வரிவிலக்கு விஷயம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுமி விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தார். 

மதுரையில் உள்ள மேல அனுப்பானடி பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா ஏற்கனவே பெண்மையை போற்றும் விதமாக காபியில் ஓவியம் வரைந்து சாதனை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: பெண்மையை போற்றும் விதமாக காபியில் ஓவியம் வரைந்து மதுரை கிருத்திகா சாதனை.!!

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai College Girl Kirthika Drawing to Save Mithra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->