பாதிரியாரின் திருட்டு வேலை.. கெத்தாக வந்தவரை, லபக்கென தூக்கிச்சென்ற காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயன் சாமுவேல். இவர் அங்குள்ள கிறிஸ்டியன் பிரதர்ஸ் சர்ச்  என்ற தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வருகிறார். 

கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக தேவாலயத்தில் ஆராதனை, பிரார்த்தனை மற்றும் நல்லொழுக்கம் குறித்து மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மதுரை பழங்காநத்தத்திற்கு சென்றுள்ளார். 

அந்த சமயத்தில், நடுவழியில் வாகனம் பழுதாகி நிற்கவே, அங்குள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மெக்கானிக்காக இருந்த சுரேஷ் என்பவர் வண்டியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து, வண்டியை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் என்றும், கடைக்கு செல்ல வேண்டுமென்றால் சென்று வாருங்கள் என்றும் கூறியுள்ளார். 

இதனையடுத்து அங்கிருந்து பாதிரியார் சென்றதும், மெக்கானிக் சுரேஷ் வாடிக்கையாளர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு, தங்களது திருடு போன இரு சக்கர வாகனம் பழுது நீக்க தனது மெக்கானிக் கடைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். 

இதனை அறிந்து சில நிமிடத்திற்கு உள்ளாகவே வாகனத்தின் உரிமையாளர் வந்து தனது வாகனம் என்பதை உறுதி செய்யவே, இதுகுறித்து அங்குள்ள சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த உரிமையாளர் மற்றும் காவல்துறையினர் கடைக்கு அருகில் மறைந்து நின்ற நிலையில், சாவகாசமாக வந்த பாதிரியார் சாமுவேலை மடக்கிப் பிடித்துள்ளனர். 

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், இவர் ஒரு பைக் திருடன் என்பதும், மதுரை மாநகரில் 12 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி, அதனை விற்பனை செய்து வந்த பணத்தில் ஜெப கூட்டம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இவரிடம் குறைந்த விலைக்கு வாகனம் வாங்கிய நபர்களிடம் இருந்து 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Church Father arrest by police theft case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->