அடித்து நொறுக்கப்பட்ட சேர்கள்.. எல்.முருகனிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் பொங்கல் சிறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ கலந்துகொண்ட நிலையில், மதுரை புறநகர் திருப்பாலை பகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார். 

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த எல்.முருகனை மாட்டுவண்டியில் அழைத்து சென்று ஊர்வலம் வந்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடையே எல்.முருகன் பேட்டியளிக்கையில், " தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பொய் குற்றசாட்டை முன்வைத்து வருகிறார். திமுகவின் பொய்யான பிரச்சாரம் மக்களிடையே எடுபடாது என்று தெரிவித்தார். 

இந்நிலையில், திருப்பாலை பெரியார் நகர் பகுதிக்கு எல்.முருகன் வர எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சி, பாப்புலர் பிராண்ட், வி.சி.க கட்சியை சார்ந்தவர்கள் எதிரகோஷம் எழுப்பி, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காலையிலேயே இருதரப்புக்கும் இடையே அடிதடி நடைபெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai BJP Pongal Festival Meeting BJP VCK Clash


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->