மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நபர் கவலைக்கிடம்?.. சேலத்தில் 19 பேர் மருத்துவமனையில் அனுமதி.. எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரஸால் இந்தியாவில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் இரண்டு பேருக்கு கரோனா அறிகுறி உறுதியான நிலையில், மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சேலம், கரூர், கோவை, நாமக்கல் மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் கரோனா அறிகுறியுடன் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai and selam corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->