மதுரை அலங்காநல்லூரில் காவல்துறையினர் தடியடி... பதற்றம்..!! - Seithipunal
Seithipunal


தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறும் இடங்களில் அமரும் மாடம், அலங்கார வளைவு, ஒலிபெருக்கி, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்த போட்டியில் பங்கேற்று சிறந்த மாடுபிடி வீரராக 14 காளைகளை அடக்கிய ஜெய்கிந்த்புரம் பகுதியை சார்ந்த விஜய்க்கு இரு சக்கர வாகனமும், 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பகுதியை சார்ந்த பரத்துக்கு பீரோ பரிசாகவும், 10 காளைகளை அடக்கிய முத்துப்பட்டி பகுதியை சார்ந்த திருநாவுக்கரசுக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது. 

நேற்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு காலை துவங்கியது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 923 வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதியில் சுமார் ஒருமணிநேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக திண்டுக்கல் பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவரின் காளையும் தேர்வு செய்யப்பட்டு, காங்கேயம் பசு மற்றும் கன்றுக்குட்டி பரிசாக வழங்கப்பட்டது. 

இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலையில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 வீரர்கள், 800 காளைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் சிறந்த வீரர் மற்றும் சிறந்த காளையாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழக முதலமைச்சரின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வசம் இரண்டு காளைகள் இருந்த நிலையில், இரண்டு காளைகளும் மாடுபிடி வீரர்களை சுழட்டி எறிந்த சம்பவம் அங்குள்ள ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை எழுப்பியது.

இந்த நிலையில்., தற்போது காளைகளை அவிழ்த்து விடுவது தொடர்பான பிரச்சனையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய காவல் துறையினர் தடியடி நடத்தி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai alanganallur jalikat police attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->