விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு...!! - Seithipunal
Seithipunal


மதுகடைகளை மூடவேண்டும் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

வ.உ.சி யின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாத புரம் பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் பேரவை சார்பில் விழா நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்ட மதுரை மடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கலந்து கொண்டார். இந்த விழாவை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

விநாயகர் சதுர்த்தி விழா வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்டது. அந்த விழா திலகர் தலைமையில் தான் நடைபெற்றது அதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மதுகடைகள் அதிகம் இருப்பதால் படிக்கும் மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகின்றனர். இதற்கு மது கடைகளை முழுமையாக மூடுவது ஒன்றே தீர்வு என கூறினார். இந்த நிகழ்ச்சியில் அரசியல்கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Adheenam about vinayakar chadurthi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->