மாமியார் செய்த வேலை., மேம்பாலத்தில் ஏறிய இளைஞன்.! மதுரையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மாமியாருக்கு வீட்டுக்கு சென்று, மகனை பார்க்க முடியாத காரணத்தினால், இளைஞர் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை பேருந்து நிலையம் அருகே, எல்லிஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் மேல் ஏறி நின்று இளைஞர் ஒருவர் தான் கீழே குதிக்கப் போவதாக சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி அவரை கீழே இறங்குமாறு சமாதானம் செய்தனர்.

அப்போது, பாலத்தின் மேல் ஏறிய ஒருவர், 'எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம்., அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. உடனே கீழே இறங்கி வாருங்கள்' என்று சமாதனம் பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால், அந்த இளைஞரோ தொடர்ந்து நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பாலத்தின் மீது ஏறி அவரிடம் சாதுர்யமாக பேசி கீழே இறக்கினர். பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் எல்லிஸ் நகர் 70 அடி சாலை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் லெனின்குமார் (வயது 20) என்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் எதற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தாய் என்று போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், தனது குழந்தையை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்றபோது, அந்த இளைஞரின் மாமியார் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியுள்ளார். 

இதனால் விரக்தியடைந்த அவர் பாலத்தில் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளைஞரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI 70 FEET ROAD YOUNG MAN ATTEMPT SUICIDE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->