பெற்றோருக்கு பிறப்பிக்கப்பட்ட கண்டிஷன்.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


18 வயதுள்ள இளம் பெண் ஒருவர் மாதந்தோறும் தந்தை பராமரிப்பு தொகை தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தன்னுடைய கல்விச் செலவுகளை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்பதை காரணம் காட்டி தான் அந்த மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மனு அளித்த பெண் மேஜர் என்பதாலும் அவர் உடல் ஊனமுற்றவராகவும் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக இல்லை என்பதாலும், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து அந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Image result for marriage seithipunal

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 ஆவது பிரிவின்படி இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் 20 ஆவது பிரிவை நினைத்து பார்க்கும் பொழுது, ஒரு பெண் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தாலும் திருமணம் ஆகும்வரை மகளை பராமரிக்க வேண்டியது தந்தையின் கடமை என இளம்பெண்ணின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 ஆவது பிரிவு மைனராக இருக்கும் வரை தான் ஒருவரை பராமரிக்க வேண்டும் என வரம்பிடுகிறது. இருப்பினும், திருமணம் ஆகும்வரை மகள்களை பராமரிக்க வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறது. என்பதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madras high court judgement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->