மதுராந்தகம் ஏரி நிரம்பியது.! பொதுமக்கள் அச்சம்..அதிகாரிகள் ஆய்வு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி அதன் முழுக்கொள்ளவை எட்ட உள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல்பட்டில் இருக்கும் மதுராந்தகம் ஏரி மிக வேகமாக நிரம்பி வருகின்றது. மதுராந்தகம் ஏரி 23 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது 22 அடியை எட்டி இருக்கின்றது. இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரும் தற்போது ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்தனது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். 

இந்த ஏரியின் மூலமாக சுமார் 2,413 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனக் கால்வாய் மூலம் நீர் பாசன வசதியைப் பெறுகின்றது. மேலும், கத்திரிச்சேரி, வளர்பிறை, கடப்பேரி ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராம நிலங்களும், இந்த ஏரியால் பயன்பெறுகின்றன. ஏரி நிரம்பிவிட்டால் 84 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும். இந்த நீர் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் கால்வாய்களில் சென்று கலக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhurandhagam lake water level


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->