நிபா வைரஸ் எதிரொலி : தமிழகத்தின் இந்த 9 மாவட்டங்களில் தீவிர., அமைச்சர் மா சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சார்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த சிறுவன் கடந்த 3 ஆம் தேதி மூளைக்காய்ச்சல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நிபா உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு குழுவின் சிறப்பு குழு கேரளாவுக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோழிக்கோட்டில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் நிபா வைரஸுக்கான காரணம் குறித்து அறிக்கையளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா  சுப்பிரமணியன், நிபா வைரஸ் குறித்து கவலை கொள்ளவேண்டாம். தமிழகம் பாதுகாப்பான நிலையில்உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிபா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெறுவதாகவும், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ma Subramanian say about Nipah Virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->